தினம் பல வன்கொடுமைகள் -- பெண்களுக்கெதிராக
Mother of two
gangraped inside varsity campus
The animals that perpetrated this heinous crime deserve to be stoned to DEATH in public!
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
Mother of two
gangraped inside varsity campus
The animals that perpetrated this heinous crime deserve to be stoned to DEATH in public!
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/28/2005 07:15:00 PM
1 மறுமொழிகள்
Labels: பொது
நீங்கள் கண்டு பிடிக்காத பல்லவிகள் இதோ!
Pl. see பல்லவியும் சரணமும் - பதிவு 23
8. கண்ணே கண்டதெல்லாம் காட்சியா, உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா?
--- பட்டணத்தில் பூதம்
10. போதுமோ இந்த இடம், கூடுமோ அந்த சுகம், எண்ணி பார்த்தால் .. --- நான்
11. மயக்கும் மாலைப்பொழுதே நீ போ போ, இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
12. காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர், காஷ்மீர் வொன்டர்புல் காஷ்மீர்!
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/25/2005 09:07:00 PM
0
மறுமொழிகள்
Labels: பல்லவியும் சரணமும்
ஓரு முறை ஒரு மாணவன் ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தில் முக்கிய வகுப்பில் சேர விண்ணப்பித்ததன் தொடர்ச்சியாக, எழுத்துத் தேர்விலும், கூட்டு ஆலோசனையிலும் வெற்றி பெற்று இறுதியாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டான். நேர்முகத் தேர்வின்போது கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடைகளை மாணவன் கூறிய வண்ணம் இருந்ததால், தேர்வாளர் பொறுமையிழந்து அவனை எப்படியாவது மடக்க தீர்மானித்து, "இப்போது, நான் உன்னிடம் சுலபமான 10 கேள்விகள் (அல்லது) மிகக் கடினமான ஒரு கேள்வி கேட்க விழைந்தால், நீ எதை விரும்புவாய்? நன்றாக யோசித்து உன் முடிவைக் கூறு!" என்றார்.
சிறிது சுய ஆலோசனைக்குப் பின் அம்மாணவன், "நான் ஒரு கடினமான கேள்வியையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்!" என்றான். அந்த தேர்வாளர். "உன் விருப்பம் அதுவானால் இதற்கு விடை சொல்! எது முதலில் வருகிறது? பகலா அல்லது இரவா?" என்று வினவினார். சற்றே அதிர்ந்து போன அந்த கெட்டிக்கார மாணவன், "பகல் தான் முதலில் வருகிறது, ஐயா" என்றான். "ஒரு வழியாக பையன் சிக்கிக் கொண்டான்' என்று மனதுள் குதூகலித்த தேர்வாளர், "எப்படிக் கூறுகிறாய்?" என்று புன்னகைத்தார்.
தேர்வாளர் கேட்டதற்கு மிகச் சரியான விடையுரைத்த அந்த புத்திசாலி மாணவனை தேர்வாளர் பல்கலைக்கழக வகுப்பில் சேர அனுமதித்தார் !!!
மாணவன் கூறிய விடை உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன்!!!! விடையை முன்பே அறிந்தவர்கள் தங்கள் திருவாயை மூடிக் கொண்டு பேயா(சா)மல் இருக்கும்படி வேண்டிக் கொள்ளும் :<)
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/25/2005 08:51:00 PM
3
மறுமொழிகள்
Labels: பதிவர் வட்டம்/புதிர்
1. துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை!
இரு பாகிஸ்தானியர்கள் வாஷிங்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறி, ஒருவர் ஜன்னலை ஒட்டிய இருக்கையிலும், இன்னொருவர் நடு இருக்கையிலும் அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒரு பருமனான சர்தாஜி அந்த பாகிஸ்தானியர்கள் பக்கத்தில் இருந்த (நடையை ஒட்டிய) இருக்கையில் அமர்ந்தார்!
அமர்ந்தவுடன், தன் கால்களை சற்று இளைப்பாற்ற காலணிகளை களைந்தவுடன், ஜன்னலருகில் அமர்ந்திருந்த பாகிஸ்தானி, "நான் சென்று ஒரு கோக் எடுத்து வருகிறேன்" என்றார். உடனே நல்ல மனம் கொண்ட நம் சர்தார்ஜி, "நீங்கள் இருங்கள், நான் போய் எடுத்து வருகிறேன்!" என்று கூறி காலுறைகளுடன் நடந்து சென்றார்.
சர்தார் சென்றவுடன், அந்த பாகிஸ்தானி, சர்தாரின் காலணிக்குள் எச்சில் துப்பி, வைத்து விட்டார். சர்தார் கோக்குடன் வந்தவுடன், இன்னொரு பாகிஸ்தானி, "எனக்கும் கோக் அருந்த வேண்டும் போலுள்ளது" என்றவுடன், சர்தார் தயாள மனதுடன், "கவலைப்படாதீர்கள்! நான் போய் உங்களுக்கும் ஒன்று எடுத்து வருகிறேன்!" என்று மறுபடியும் சென்றார். அந்த நேரத்தில், அதே பாகிஸ்தானி இப்போது சர்தாரின் மற்றொரு காலணியிலும் எச்சில் துப்பி வைத்து விட்டார்!!!
சிறிது நேரத்தில், விமானம் தரை இறங்கத் தொடங்கியது. சர்தார் காலணிகளுக்குள் தன் கால்களை நுழைத்தவுடன், நடந்த நிகழ்வை யூகித்து புரிந்து கொண்டு விட்டார்!!! மிகுந்த வேதனையுடனும் மனவலியுடனும், பாகிஸ்தானியர்களை பார்த்து கூறினர் " இன்னும் எவ்வளவு நாள் இவை நீடிக்க வேண்டும்! நம்மிடையே நிலவும் இந்தப் பகை ... வெறுப்புணர்வு ... தீங்கு செய்ய நினைக்கும் மனோபாவம் ... காலணிகளுக்குள் எச்சில் துப்புதல், கோக்கில் சிறுநீர் கழித்தல் !!!!!!"
2. முத்தமும் சத்தமும்!
ஒரு பாகிஸ்தானி, ஒரு சர்தாஜி, ஒரு அழகான இளம்பெண் ஆகிய மூவரும் ரயிலில் ஒரு முறை பயணம் செய்தனர். ரயில் ஒரு குகையினூடே பயணித்துக் கொண்டிருந்த இருட்டு வேளையில், முத்தமிடும் சத்தமும் அதைத் தொடர்ந்து கன்னத்தில் அறை விழும் சத்தமும் கேட்டது!!!
ரயில் குகையிலிருந்து வெளிவந்து ரயில் பெட்டியில் வெளிச்சம் பரவியபோது, பயணிகள் அனைவரும் பாகிஸ்தானியின் கன்னம் சிவந்து வீங்கியிருப்பதை பார்த்தனர். பாகிஸ்தானி குழப்பத்துடன், "அந்த திருட்டு சர்தாஜி அந்த அழகிய பெண்ணை முத்தமிட முயன்று, அவள் தவறுதலாக என்னை அறைந்து விட்டாள்" என நினைத்துக் கொண்டான். அந்த பெண்ணோ, "அந்த பாகிஸ்தானி நான் என நினைத்துக் கொண்டு சர்தார்ஜியை முத்தமிட்டதால் அறைபட்டிருப்பான்!" என்று எண்ணினாள்!
நம் அன்புக்குரிய புத்திசாலி(!) சர்தார்ஜி, "இந்த ரயில் மீண்டும் ஒரு குகைக்குள் நுழைந்தால், அந்த இருட்டில், நானே, முத்தமிடுவது போல் இன்னொரு சப்தத்தை உண்டாக்கி, அந்த பாகிஸ்தானி முட்டாளை மறுபடியும் செவிட்டுல் அறைய வாய்ப்பு கிடைக்குமே!!!" என்று நினைத்துக் கொண்டார் :-)
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/23/2005 02:17:00 PM
2
மறுமொழிகள்
Labels: நகைச்சுவை / நையாண்டி
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ...
2. தினம் படிக்க படிக்க வரும் கவி போலே ...
3. காளை நானும் கன்னுக்குட்டி ஆனேனே ...
4. எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும் ...
5. நம் கவலைகள் யாவும் தீரும் ...
6. பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் ...
7. பகை வந்தபோது துணை ஒன்று உண்டு ...
8. ஊடல் செய்ய பெண்களுக்கு நேரம் இருக்கும் ...
9. தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியமானது ...
10. தேடும் கைகள் தேடும்போது தேனும் பாலும் ஊறவும் ...
11. கனியிதழ் காதல் பசி தீர்க்குமே காண்போம்...
12. எந்நாட்டவர்க்கும் கலைக் கோயிலிது...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/23/2005 02:12:00 PM
10
மறுமொழிகள்
Labels: பல்லவியும் சரணமும்
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/20/2005 11:29:00 PM
0
மறுமொழிகள்
Labels: பொது
'Why do Saudis kill innocents?'
இம்மாதிரி அப்பாவிகளின் உயிரை குடிக்கும் இந்த நவீன சவுதி அரக்கர்களை உலகின் எந்த நாட்டினரும் சரியாக தட்டிக் கேட்பதில்லை என்று தோன்றுகிறது! ஈராக்கிற்கு எதிராக, பல நாடுகளும் சேர்ந்து கொண்டு, பலவித தடைகளை (sanctions) முன் வைத்தன. ஆனால், சவுதி அரேபியாவின் இது போன்ற காட்டுமிராண்டித்தனமான, நியாயமற்ற செயல்களுக்கு ஒரு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாதது பொதுவான ஒரு நோயுற்ற உலகச் சூழலின் மற்றும் 'நமக்கென்ன வந்தது?' என்ற அக்கறையின்மையின் வெளிப்பாடு என்று எண்ணத் தோன்றுகிறது. இந்தியர் என்றால் எவ்வளவு இளக்காரம் பாருங்கள்! இதே போல ஒரு அமெரிக்கரின் / பிரிட்டிஷரின் (அவர் நிரபராதி ஆக இல்லாவிட்டாலும்) உயிரை துச்சமாக மதிக்க இந்த அரேபிய அரசாங்க ஓநாய்களுக்கு தைரியம் வருமா?
India mute on Jeevan Kumar's slaughter
சில நாட்களுக்கு முன் பிச்சைக்கார, சுண்டைக்காய் (நாம் வாங்கித் தந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்) நாடான பங்களாதேஷை சேர்ந்த ராணுவத்தார் ஓர் அப்பாவி கிராமத்தாரை மீட்கச் சென்ற நம் BSF காவலர்கள் இருவரை அவர்கள் எல்லைக்கு அப்பால் இழுத்துச் சென்று குரூரமாகக் கொலை செய்தார்கள். நமது அரசாங்கம் ஒரு வாரம் வேடிக்கை பார்த்து விட்டு, பலரின் கொந்தளிப்புக்குப் பின், பங்களாதேஷுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கிறது.
இம்மாதிரி நமது அரசாங்கத்தின் (எந்த கட்சியை சேர்ந்ததாக இருந்தாலும்) முதுகெலும்பற்ற அணுகுமுறையும், நமது அரசியல்வாதிகளின் உணர்ச்சியற்ற மனோபாவமும் நமது நாட்டவரை பிறர் கிள்ளுக்கீரையாகவும், கேவலமாகவும் பார்ப்பதற்கும் / நடத்துவதற்கும் வழி வகுக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/20/2005 02:45:00 PM
14
மறுமொழிகள்
Labels: எ.அ.பாலா கருத்து
அவசரப்படேல்!
ஒரு கடைநிலை மேலாளர், இடைநிலை மேலாளர் மற்றும் உயர் மேலாளர் ஆகிய மூவரும் ஓர் அலுவல் குறித்த முக்கிய சந்திப்புக்காக அவசரமாக சென்று கொண்டிருக்கும்போது, வழியில் ஓர் அதிசய விளக்கை பார்க்கின்றனர்.
அம்மாய விளக்கை எடுத்து தேய்த்தவுடன், ஒரு பூதம் அவர்கள் முன் தோன்றி, "நான் சாதாரணமாக ஒருவருக்கு மூன்று வரங்கள் தருவேன்! இங்கு நீங்கள் மூவர் இருப்பதால், ஆளுக்கொரு வரம் தருகிறேன்! கேளுங்கள்" என்றது.
இடைநிலை மேலாளர் முந்திக் கொண்டு, "நான் இப்பொழுதே பஹாமாஸ் அருகே உள்ள கடலில், ஒரு விசைப்படகில், எந்தவித கவலையுமின்றி பயணிக்க வேண்டும்!" என்றவுடன், பூதத்தின் அருளால், அவர் அவ்விடத்திலிருந்து மாயமாய் மறைந்து போனார்!
உடனே பொறுமையை இழந்த கடைநிலை மேலாளர், "நான் மியாமி கடற்கரையில், குறைவில்லா உணவு, மது வகைகளுடன் அழகிய பெண்கள் சூழ உல்லாசமாய் பொழுதை கழிக்க விரும்புகிறேன்!" என்றவுடன், அவரும் பூத அருளால் காணாமல் போனார்!
அதுவரை பொறுமையாய் இருந்த உயர் மேலாளர், பூதத்திடம் (தன் விருப்பமாக) அமைதியாகக் கூறினார், " அந்த இரு முட்டாள்களும், மதிய உணவிற்குப் பிறகு சரியாக 1 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும்!"
பாடம்: எப்போதும், உங்கள் மேலாளரை முதலில் பேச விடுவது சாலச் சிறந்தது!
****************************************
ஒரு மேலாளரின் பரிந்துரைக் கடிதம்
உயர் மென்பொருள் பொறியாளராக பணி புரியும் திரு.நாராயணன், எப்போதும்,
கடுமையாக உழைப்பவர். அவர் திறமையாக தனித்து செயல்படுவதோடு,
சக பணியாளர்களிடம் வம்பு பேசி நேரத்தை வீணாக்குவதை
விரும்புவதில்லை. அதற்கு நேர்மாறாக, பணியில் மற்றவருக்கு உதவுவதையே
பழக்கமாக கொண்டவர். அவர், கொடுத்த வேலையை நேரத்தில் முடிப்பதில்
மிகுந்த அக்கறை செலுத்துபவர்! அவர் பல சமயங்களில் மதிய உணவில் கூட
கவனம் செலுத்துவதில்லை! அவரிடம் அறவே இல்லாததாக நான் நினைப்பது
தலைக்கனமும் அரட்டையும்! பணியில் நிறைய சாதித்த அவரிடம் மிகுந்திருப்பது
வேலை சம்மந்தப்பட்ட நுண்ணறிவே. எனவே, திரு.நாராயணனை
நிறுவனத்தின் முக்கியப் பணியாளராகக் கருதி, அதிக வேலைச் சுமையிலிருந்து
நிரந்தரமாக விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், அவரை
பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கிறேன். அதை விடுத்து அவரை இதே பதவியில்,
பணியில் வைத்திருப்பது நல்லதல்ல என்று உறுதியாகக் கூறுகிறேன்!
சிறிது நேரத்திற்குப் பிறகு அதே மேலாளர் அந்த நிறுவனத்தின் மனித மேம்பாட்டுத் துறைக்கு ஒரு சிறு குறிப்பை அனுப்பி வைத்தார்.
"நான், இன்று காலை, உங்களுக்கு அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தை எழுதும்போது, அந்த அறிவிலி நாராயணன் என் அருகில் தான் இருந்தான்! எனவே, அக்கடிதத்தின் ஒற்றைப்படை வரிகளை மட்டுமே படித்து, நாராயணனைப் பற்றிய எனது கணிப்பை அறியவும் !!!!! நன்றி!
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/17/2005 07:37:00 PM
1 மறுமொழிகள்
Labels: நகைச்சுவை / நையாண்டி
கீழுள்ளது MERE SUGGESTION (மூலம்: ·பெர்னான்டோ ஸோரண்டினோ) என்ற சிறுகதையின் தமிழாக்கம்!!
சரியான சொற்களை பயன்படுத்துதல், புரிதல் மற்றும் வீச்சு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் என்னுடையவை மட்டுமே! மன்னிக்கவும்!
ஓர் எளிய யோசனை!
என் நண்பர்கள் நான் யோசனையின் உந்துதலுக்கு மிகவும் ஆட்படுகிறவன் என்கிறார்கள். அது சரியென்று தான் நினைக்கிறேன்! என் நடத்தைக்குச் சான்றாக, அவர்கள், சென்ற வியாழன் நடந்த ஒரு சிறிய நிகழ்வை முன் வைக்கிறார்கள்!!!
அக்காலை வேளையில் நான் ஒரு திகில் நாவலை படித்துக் கொண்டிருந்தேன். அப்பிரகாசமான காலை நேரத்திலும், ஒரு விநோத யோசனை பின்னிய கனத்த வலையில் நான் வீழ்ந்தேன்! அந்த யோசனை, ஒரு கொடிய கொலைகாரன் நீண்ட கத்தியுடன் சமையலறையில் இருப்பதாகவும், நான் அங்கு நுழைந்தால் என் மீது அக்கத்தியை பாய்ச்சக் காத்திருப்பதாகவும் ஆன ஒரு விபரீத எண்ணத்தை என்னுள் ஆழப் புதைத்தது!
நான் சமைலறையின் கதவுக்கு நேரெதிரே அமர்ந்திருந்தேன்! அக்கதவைத் தவிர அவ்வறையை அடைய வேறொரு வழி கிடையாது! என் கண்ணில் படாமல் எவரும் சமையலறைக்குள் செல்ல வாய்ப்பே இல்லை! இவ்வளவும் எனக்குத் தெரிந்திருந்தும், அக்கொலைகாரன் அக்கதவிற்குப் பின்னால் காத்திருப்பதாக தோன்றிய உணர்வை நான் முழுவதும் நம்பினேன்! இவ்வாறாக, அந்த யோசனையின் பலத்த பிடியில் சிக்குண்ட எனக்கு சமைலறையினுள் செல்ல மனத்திடம் இல்லை!
மதிய உணவிற்கான சமயம் நெருங்கிக் கொண்டிருந்ததால், நான் சமையலறைக்குள் போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமே என்ற கவலை என்னை ஆட்கொண்டது! அப்போது வாயிற்கதவு தட்டப்பட்டது! "உள்ளே வாருங்கள்! கதவு திறந்தே தான் உள்ளது!" என்று நாற்காலியை விட்டு எழாமலேயே உரக்கக் கூறினேன். எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பார்வையாளர் கையில் கடிதங்களுடன் கதவைத் தள்ளி உள்ளே வந்தார். "என் கால்கள் சற்று மரத்து விட்டன! தயை கூர்ந்து தாங்கள் சமையலறை சென்று, எனக்கு குடிக்கத் தண்ணீர் எடுத்து வர முடியுமா?" என வினவினேன்!!!
அவர் "தாராளமாக!" என்றபடி, சமையலறைக் கதவை திறந்து உள்ளே சென்றார்! அடுத்த நொடி, சமையலறையிலிருந்து மரண ஓலமும், பாத்திரங்களை இழுத்துத் தள்ளியபடி ஒருவர் கீழே சாயும் பெருஞ்சத்தமும் கேட்டது!!! நான் நாற்காலியிலிருந்து பாய்ந்தெழுந்து சமையலறை நோக்கி ஓடினேன்! பாதி உடல் மேசை மேல் கிடந்தவாறு, முதுகில் ஒரு பெரிய கத்தி ஆழச் செருகப்பட்ட நிலையில் கட்டட மேற்பார்வையாளர் மிகவும் இறந்திருந்தார்!!! சற்று நேரத்தில் அமைதியடைந்த நான் சமையலறையில் எந்த ஒரு கொலைகாரனும் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டேன்!
இது, ஓர் எளிய யோசனையின் உந்துதலால் உண்டான ஒரு விஷயம் தான் என்பதும் நிரூபணமாயிற்று!
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/16/2005 11:06:00 PM
0
மறுமொழிகள்
Labels: கதை/கவுஜை
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் ...
2. பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் ...
3. தனிமையிலே, வெறுமையிலே எத்தனை நாள் ...
4. தட்டினால் திறப்பதன்றோ தேவன் கோவில் மணிக்கதவு ...
5. பூவை நெஞ்சில் நாளும் பூபாளம் ...
6. காலாலே நிலத்திலே கோலம் போட்டு ...
7. மலையின் மீது ரதி உலாவும் நேரமே ...
8. கண்ணும் கண்ணும் கலந்து விட்டது ...
9. நான் பார்த்தது அழகின் ஆலயம் ...
10. கொத்து மலர்க்குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ ...
11. மேகம் உந்தன் கூந்தல் மலராடும் ஊஞ்சலாம்...
12. முகத்தை மறைத்துக் கொண்டால் பார்க்க முடியுமா...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/16/2005 11:00:00 PM
8
மறுமொழிகள்
Labels: பல்லவியும் சரணமும்
உங்களுக்கு சில செய்திகள்!
1. அரசியல்: ஜெ'யின் எள்ளல்!
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டசபைத் தலைவர் திரு.GK மணி, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்குவதன் அவசியத்தை சட்டசபையில் தொடர்ந்து வலியுறுத்தியபோது, தமிழக முதல்வர் முன் வைத்த மறுமொழி சுவாரசியமாக இருந்தது! ஆனால், PMK-க்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது!!!
தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு தலைமையேற்றிருக்கும் PMK, முதலில் அதன் தலைவரின் மகனும் மத்திய அமைச்சருமான Dr.அன்புமணிக்கு (இவர் பெரும்பாலும் 3 பீஸ் சூட் உடையில் வலம் வருபவர்!) தமிழ் கலாச்சாரப்படி உடை அணிவதை அறிவுறுத்துமாறு முதல்வர் கேட்டுக் கொண்டது சூப்பரோ சூப்பர்!!!
அதே நேரத்தில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை, உடை அணியும் விஷயத்தில், முதல்வர் மனம் விட்டு பாராட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது! முதல்வர் மொழியும், கலாச்சாரமும் பின்னிப் பிணைந்தவை என்றும் ( உடை விஷயம் வேறு, மொழி விஷயம் வேறு என்று விதண்டாவாதம் செய்த!) திரு.G.K.மணிக்கு எடுத்துரைத்தார்!
இதற்குப் பேர் தான் பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்காய் மாறிய கதை என்பதோ?
2. விளையாட்டு: ஆனந்துக்கு செஸ் ஆஸ்கார் விருது!
தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்த், தொடர்ந்து இரண்டாவது வருடமும் (மொத்தம் நான்கு முறை!) செஸ் ஆஸ்கார் விருதை வென்றதன் வாயிலாக தான் உலகின் தன்னிகரில்லா முதல் நிலை ஆட்டக்காரர் என்பதை தெளிவாக நிரூபித்திருக்கிறார். ரஷியர் அல்லாதவரில் இவ்விருதை வென்றவர் ஆனந்த் ஒருவரே என்பதும், இதற்கு முன் 1997, 1998-லும் இதே விருதை அவர் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது! இவ்விருதுக்குரியவரை 64-MAGAZINE என்ற செஸ் பத்திரிகைக்காக 75 நாடுகளிலிருந்து 445 செஸ் விற்பன்னர்கள் (இதில் 74 கிராண்ட் மாஸ்டர்களும் அடங்குவர்!) தேர்வு செய்கின்றனர்!
சென்னையை சேர்ந்த இந்த 'செஸ் புலி' அதிவேக மற்றும் கிளாஸிக்கல் ஆகிய இருவகைப்பட்ட போட்டிகளிலும் பல பட்டங்கள் வென்றவர் என்பது பாராட்டப்பட வேண்டியது. ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் முதலாவதாக வந்த ஆனந்த் 5025 புள்ளிகளும், அடுத்து வந்த கேஸ்பரோவ் 3664 புள்ளிகளும் எடுத்தனர்! இதுவரை வழங்கப்பட்ட 10 செஸ் ஆஸ்கார் விருதுகளில், கேஸ்பரோவ் 5 முறையும், ஆனந்த் 4 முறையும் வென்றுள்ளனர் என்பதை பார்க்கும்போது இவ்விருவரும் கடந்த 9 வருடங்களாக செஸ் உலகை எந்த அளவுக்கு தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர் என்பதை உணரலாம்!!!
3. Energizer - சாத்தானின் போதைப் பொருள்!
சாத்தானின் போதை மருந்து என்றழைக்கப்படும் Methamphetamine, தற்போது அமெரிக்காவை ஆக்ரமித்து, ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வை நாசமாக்கிக் கொண்டிருக்கிறது! மெதம்·பெடமின், குறைந்த விலையில் சுலபமாக தயாரிக்க வல்ல ஒரு வேதியியற் கலவை!
ஐஸ் மற்றும் க்ரிஸ்டல் என்றும் அழைக்கப்படும் மெத் (METH), ஒருவருக்கு கிட்டத்தட்ட 12 மணி நேரம், போதை தரும் பெருமகிழ்ச்சியும் (EUPHORIA) சக்தியும் தரவல்லது. அது மனதை ஒருமுகப்படுத்த(!) உதவுவதோடு, இன்ப உணர்வுகளை அற்புதமாக அதிகப்படுத்துவதாகவும், மெத்-ஐ பயன்படுத்துபவர்கள் கூறுகிறார்கள்!!! ஆனால், மெத்-ஐ எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை!
மெத் மூளையின் செயல்பாட்டு வேதியியலை பாதிப்பதால், இதற்கு அடிமையானவர்கள் மனநோயாளிகளாகவும் (PARANOIA!), மூர்க்க குணம் கொண்டவர்களாகவும், குடும்பத்தையும், ஆரோக்கியத்தையும் புறக்கணிப்பவர்களாகவும் மாறி விடுகிறார்கள். அமெரிக்காவில் மெத் அதிகம் புழங்கும் மாகாணங்கள், Missouri, Iowa, Illinois, Indiana, Arkansas ஆகியவை.
மெத் போதைப் பழக்கத்தை உதறித் தள்ளிய அமெரிக்கர் ஒருவர், வேறெந்த போதைப் பொருளும் தராத "உயருணர்வை" (unique HIGH!) மெத் வழங்கியதாகக் குறிப்பிடுகிறார்! அவர் மேலும் கூறுகிறார் (இந்திய அரசாங்க குறும்படப் பாணியில்!), "மெத் அற்புதமானது! அது வேலை செய்யத் தொடங்கியவுடன் நீங்கள் மிகுந்த புத்திசாலியாகவும், சக்திசாலியாகவும் உணர்வீர்கள்! மெத் ஒன்றே உங்கள் வாழ்வின் முதலும் முக்கியமும் ஆன விஷயமாகக் கருதும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்! ஏனெனில், மெத் தரும் ஜாலி அலாதியானது!!!"
இவர் சொல்றதைக் கேட்டா, TRY பண்ணிப் பாக்கலாம் போல இருக்கே ;-))
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/14/2005 04:38:00 PM
1 மறுமொழிகள்
Labels: பொது
Two-questions -இல் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கான விடைகள் இதோ:
1. அந்த இந்திய சகாப்தத்தின் புகைப்படம் கீழே!
"லகான்" climax-இல் ஆங்கிலேயருக்கு எதிராக இவர் ஆடிய அபாரமான ஆட்டத்தை மறக்கத் தான் முடியுமா? இத்தனை சுலபமான வினாவிற்கு ஒருவரும் விடை தரவில்லை ;-)
2. 21,12,12,1,2 ....... எண் வரிசையின் அடுத்த எண் ?
மேற்கூறிய எண் தொடரின் அடுத்த மூன்று எண்கள் 0, 9, 4 ஆகியவை.
21,12,12,1,2 --- கங்குலி டெஸ்ட் போட்டிகளில் எடுத்த ஓட்டங்கள்!
அதன் தொடர்ச்சியாக 3 ஒரு நாள் போட்டிகளில் அவர் குவித்த(!) ஓட்டங்கள் முறையே 0, 9, 4. என்ன சரியா ?????
ஜெயஸ்ரீ இதற்கான பதிலை சரியாக கூறி விட்டார்!
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/10/2005 10:49:00 PM
4
மறுமொழிகள்
Labels: பதிவர் வட்டம்/புதிர்
ஆண்டவரே,
என்னால் மாற்ற முடியாத விடயங்களை ஒப்புக் கொள்ள வல்ல மன அமைதியையும்,
என்னால் ஒப்புக் கொள்ள இயலா விடயங்களை மாற்ற வல்ல மனத்திடத்தையும்,
என்னை கடுப்பேற்றும் மாந்தரின் சிற்றறிவுக்கு எட்டும் வண்ணம் விளக்கம் தர வல்ல ஞானத்தையும்
நீவிர் வழங்குவீராக!
அதோடு, நான் எவரெவரின் பாதங்களை இன்று மிதிக்கிறேன் என்பதில் கவனமாக இருக்க உதவுவீராக!
ஏனெனில், அப்பாதங்களுடன் இணைந்த பின்புறங்களை நாளை நான் முத்தமிட வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம்!!!
அலுவலில் என்னை 100% , அதாவது,
திங்கள் 12%,
செவ்வாய் 23%,
புதன் 40%,
வியாழன் 20%,
வெள்ளி 5% என்ற விகிதத்தில்,
முழுமனதுடன் ஈடுபடுத்திக் கொள்வதற்கான வல்லமையை தருவீராக!
இறுதியாக, அலுவலகத்தில் நான் சந்திக்க நேரிடும் கடினமான தருணங்களில்,
ஒருவரிடம் முகம் சுளிக்க 42 தசைகளையும், நடுவிரலை காட்ட 4 தசைகளை மட்டுமே
இயக்க வேண்டியிருப்பதன் அவசியத்தை நினைவில் கொள்ள துணையிருப்பீராக!
சரி, சரி, படிச்சது போறும்! ஆபிஸ்லே வேலயைப் பாருங்க!
போய்யா .... போ ('சதா' ஸ்டைல்!) !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/10/2005 06:27:00 PM
0
மறுமொழிகள்
Labels: சிரிப்பா சிரிங்க
நமது அதிபுத்திசாலி கேப்டன்!
இந்திய அணியின், பாகிஸ்தானுக்கு எதிரான, அவமானமிக்க பெங்களூர் டெஸ்ட் தோல்வியைத் தொடர்ந்து, அணி வீரர்கள் பொது மக்களிடம் தங்கள் முகத்தை காட்ட விரும்பாமல் தங்கள் ஹோட்டல் அறைகளிலிருந்து வெளியே வருவதை அறவே தவிர்த்தார்கள்!
ஆனால், திருவாளர் கங்குலிக்கோ, அறையில் அடைந்து கிடப்பதை விடவும், வெளியில் சென்று ஊர் சுற்றவும் ஷாப்பிங்க் செய்யவும் மிகுந்த ஆசை! எனவே, ஒரு சர்தாஜி போல மாறுவேடமணிந்து, ஹோட்டலை விட்டு வெளியே வந்தவுடன் ஒரு இளம்பெண், "ஹாய் சவுரவ்! எங்கே கிளம்பி விட்டீர்கள்?" என்றாள்.
ஆச்சரியப்பட்டுப் போன நமது கேப்டன் திலகம் விரைந்து தனது அறைக்கு சென்று, இம்முறை ஒரு முஸ்லிம் பெண் போல் உடை/புர்கா அணிந்து, ஹோட்டலை விட்டு வெளியே செல்ல யத்தனித்தபோது, முதலில் சந்தித்த அதே பெண், "ஹாய் சவுரவ்!" என்று கூறி புன்னகை பூத்தாள்!
துணுக்குற்ற நமது பெங்காலி பாபு, அறைக்கு சென்று கடைசி முயற்சியாக, மிகுந்த சிரமப்பட்டு தன்னை ஒரு ஹிப்பி போல சிங்காரித்துக் கொண்டு, ஹிப்பியின் நடை உடை பாவனையோடு ஹோட்டலை விட்டு வெளியேற முயன்றபோது, அதே பெண் மறுபடியும், "ஹாய்! சவுரவ்" என்றவுடன், மிகுந்த கடுப்பும், அதிர்ச்சியும் அடைந்த கங்குலி, "எப்படி நான் யாரென்று சுலபமாக கண்டு பிடித்து விடுகிறாய் ???" என வினவ, அந்த பெண் சிரித்தபடி கூறினாள், "தாதா! நான் தான் VVS லஷ்மண்!!!"
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/09/2005 08:50:00 PM
0
மறுமொழிகள்
Labels: நகைச்சுவை / நையாண்டி
சில வியாபாரிகளும், ஒரு டாக்டரும், ஒரு மாலை நேர சதுரங்க ஆட்டமும்!
சிறுவயது நினைவுகளை அசை போடுவது போல ஓர் இனிமையான சங்கதி (என்னளவில்!) கிடையாது. திருவல்லிக்கேணியில் ஒரு பழைய வீட்டில் வாழ்ந்தபோது நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வுகள் மற்றும் உடன் வாழ்ந்த மனிதர்கள் குறித்தும் நிறையவே எழுதலாம்! பழைய ஞாபகங்களை அலசி, அவற்றை பதிவு செய்வதற்கு நேரம் ஒதுக்குவது தான் சற்று சிரமமாக உள்ளது.
அந்தக்காலத்தில் வீட்டுக்கு வேண்டிய பல பொருட்கள் (இப்போது போல மளிகைக் கடையிலிருந்தோ சூப்பர் மார்க்கெட்டிலிருந்தோ அல்லாமல்!) வெவ்வேறு வியாபாரிகளிடமிருந்து கிடைக்கப் பெற்றன. 3 மாதங்களுக்கு ஒரு முறை ஒருவர் கிராமத்திலிருந்து புளியை எடுத்து வந்து எங்கள் தெருவில் இருந்த பல வீடுகளுக்கு சப்ளை செய்தார். அதே போல், அரிசி ஒரு நெல்லூர் தெலுங்கரிடமிருந்து வந்தது. பருப்பு வகைகள், எண்ணெய், நெய் என்று ஒவ்வொரு அயிட்டத்தை ஒவ்வொருவர் வீடு தேடி வந்து விற்பனை செய்த காலமது! கல் உப்பை மரத்தள்ளு வண்டியில் வைத்து ஒரு கிழவனார் கூவி கூவி விற்பார்! அதே போல, கோலமாவு, தயிர், பால், பூ, கீரை போன்றவைகளை கூடைகளில் சுமந்து வந்து விற்ற பெண்மணிகளுக்கும் வீட்டுப் பெண்மணிகளுக்கும் இடையே நல்ல அன்னியோன்யம் காணப்பட்டது.
***********************************************
எங்கள் வீட்டுக்கு 2 வீடு தள்ளி டாக்டர் ரங்கராஜன் என்பவர் மருத்துவச் சேவை செய்து வந்தார். அவர் வீட்டின் முன்புறம் கிளினிக்காக மாற்றப்பட்டு, பின்புறம் அவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். வெள்ளை உடை அணிந்து கம்பீரமாகவும் தூய்மையாகவும் காணப்படுவார். அவர் கிளினிக்கின் பிரத்யேக மருந்து வாசனை என் மூக்கின் ஒர் ஓரத்தில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது எனலாம்!!! அவருக்கு ஒர் உதவியாளர் (கம்பவுண்டர்) இருந்தார். எல்லா வகை வலிகளுக்கும் காய்ச்சல்களுக்கும் அந்த கம்பவுண்டர் கலக்கித் தரும் சிவப்பு வண்ண திரவமும், இடித்துத் தரும் வெள்ளைப் பொடியும் தான் சகலகலா நிவாரணி! அவர் தந்த மருந்துகள் பலன் தராவிடினும், அவர் காட்டும் கனிவிலேயே நோயாளிகள் குணம் பெற்று விடுவர்!
ஏழைகளிடம் குறைந்த கட்டணமும் (1 ரூபாய்), பணமிருந்தவர்களிடம் சற்று அதிகமாகவும் வசூலிப்பார். அவரைப் போன்ற டாக்டர்களை இப்போது பார்ப்பது அரிது. Clearly, Medical profession has lost its nobility and making money has become the prime objective, like in any other profession!!! அந்த நல்ல மருத்துவர் வாழ்ந்த வீட்டில் தற்போது ஒரு பள்ளிக்கூடம் இயங்குவதைக் காணும்போது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. அதற்கு நேர்மாறாக, நான் (1 முதல் 5 வகுப்பு வரை) படித்த பள்ளிக்கூடம் இருந்த இடத்தில், தற்போது ஒரு காபிக்கொட்டை கடையும், சூப்பர் மார்க்கெட்டும் இயங்கி வருகின்றன (எல்லாம், நான் அப்பள்ளியில் படித்ததாலோ, என்னவோ?) !! எல்லாமே, "காலம் செய்த கோலமடி!" என பாடத் தோன்றுகிறது.
**********************************************
சிறுவயதில் ஒரு காலகட்டத்தில் செஸ் விளையாட்டின் மீது ஒரு வெறியே இருந்தது. பல புத்தகங்களை படித்ததாலும், சிறந்த செஸ் ஆர்வலர்கள் மத்தியில் இருந்ததாலும், செஸ் ஓரளவு நன்றாகவே ஆடப் பழகி விட்டேன்! எங்களது செஸ் ஆடுவோர் குழுவில், என்னுடன் ஒப்பிடுகையில் மற்றவர் ஜாம்பவான்கள்!!! அவர்களில் முக்கியமானவர்கள், 'சார்' என்றழைக்கப்பட்ட M.Com படிப்பில் தங்க மெடல் வாங்கிய ராகவன் (டோண்டு அல்ல!), கிண்டி பொறியியற் கல்லூரியில் படித்து வந்த ராஜு (புத்திசாலி, ஆனால் கொஞ்சம் கர்வி!), சென்னைப் பல்கலைக்கழக சேம்பியன் ரமணி மற்றும் சதுரங்க விளையாட்டத்தை உயிர் மூச்சாகவும், பா·பி ·விஷரை ஆதர்ச நாயகனாகவும் பாவித்து வந்த 'செஸ்' வரதராஜன் ஆகியோர். தினமும் மாலை நேரங்களில் பள்ளி விட்டு வந்தவுடன் சார் வீட்டுத் திண்ணையில் செஸ் ஆட்டங்கள் நடைபெறும். எல்லாமே செஸ் விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்ற சீரியஸான ஆட்டங்கள்! அதோடு உலகின் சிறந்த ஆட்டக்காரர்களின் ஆட்டங்கள் பற்றிய விவாதங்களும் உண்டு. அப்போது தான், என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றது!!!
அந்த கார்கால மாலைப் பொழுதில் வானம் இருண்டு, லேசான தூறலுடன் மெல்லிய காற்று வீசிக் கொண்டிருந்தது. வழக்கம் போல நாங்கள் (ஒருவருடன் ஒருவர்) செஸ் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது வீதியில் குப்பை பொறுக்கும் ஒரு தாடி இளைஞர், தோளில் கோணியோடு, வாசலில் நின்றபடி சன்னல் கம்பி வழியாக நாங்கள் ஆடுவதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். சார் அவரைப் பார்த்து, "செஸ் ரொம்பப் பிடிக்குமா? விளையாடத் தெரியுமா?" என ஒரு பேச்சுக்கு கேட்டார். அவ்விளைஞர், " சுமார ஆடுவேங்க! என்னையும் சேத்துப்பீங்களா?" என்று பணிவாகக் கேட்டார். சார் என்ன நினைத்தாரோ, அவ்விளைஞரைப் பார்த்து, "கோணியை ஒரமாக வைத்து விட்டு இங்கு வந்து இவரோடு ஒரு ஆட்டம் ஆடலாம், வா!" என்று ராஜுவை சுட்டிக் காட்டி கூறினார்.
ராஜு, "நான் ஆடத்தான் வேண்டுமா?" என்று அயற்சியாக வினவ, சார், "பாவம், ஆசைப்படறான்! ஒரு வாய்ப்பு தரலாம் அல்லவா?" என்று குழுவின் தலைவர் என்ற முறையில் தனது முடிவை சொன்னவுடன் ஆட்டம் தொடங்கியது! முதலில் கேஷ¤வலாகவும், வேகமாகவும் ஆட ஆரம்பித்த ராஜு பத்து நகர்த்தல்களுக்கு (MOVES) பிறகு, எதிராளியின் (Ruy Lopez opening-க்கு எதிரான) பதில் மூவ்களைக் கண்டவுடன், முதலில் கொஞ்சம் பின்னர் அதிகம் யோசிக்கவும் தொடங்கினார்.
செஸ் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தூறல் வலுத்து, இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது! ராஜு 2 யானைகளை இழந்து தாடியின் ராணியை வீழ்த்தியிருந்தார். தாடி அசரவில்லை! இருவருமே அடுத்தவரின் பாதுகாப்பு அரணை உடைக்க தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு ராஜுவுக்கு வியர்க்க ஆரம்பித்தது. வெற்றி பெற வேண்டும் என்பதை விட டிரா செய்ய வேண்டுமே என ராஜு பிரயத்தனப்படுவதை உணர முடிந்தது. குப்பை இளைஞரின் முகத்திலோ எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லை!! இந்த வினோதமான விளையாட்டைக் காண கூட்டம் வரத் தொடங்கியது.
ஒரு கட்டத்தில், ராஜு, "யாரும் ஜெயிக்க வாய்ப்பில்லை! டிரா என்று வைத்துக் கொள்வோம்" என்றதற்கு அவ்விளைஞர், "இல்லீங்க! இன்னும் ஆட்டம் பாக்கி இருக்குதுங்க!" என்றார். கடுப்பான ராஜு ஆட்டக்களத்தில், ஆக்ரோஷமான தாக்குதலைத் தொடங்கினார். இப்போது வானம் மடை திறந்தது போல, பேரிரைச்சலுடன் மழை பெய்து கொண்டிருந்தது! அதைத் திறமையாக சமாளித்த தாடி இளைஞர், தன் ராஜாவை பத்திரப்படுத்தி விட்டு, ராஜுவின் ராஜாவை சந்திக்கு இழுத்து, ஒரு தேர்ந்த விற்பன்னரின் லாவகத்துடன் காய்களை நகர்த்தி (ராஜு அந்த ஆளுக்கு எதிராக 'ரிஸைன்' செய்வதை அவமானமாக எண்ணியதாலும், எப்படியாவது PERPETUAL CHECK வழியிலாவது தப்பித்து விடலாம் என்று நினைத்ததாலும்!) ஒரு கட்டத்தில், "செக் மேட் (check mate!), ஆனால் நீங்க ரொம்ப நல்லா ஆடறீங்கய்யா! நன்றிங்க!" என்று கூறி விட்டு, தன் கோணிப்பையை எடுத்துக் கொண்டு திரும்பி பார்க்காமல், விடுவிடுவென்று நடந்து சென்று விட்டார்!!! அதே நேரம் மழையும் நின்று, தெருவில் மழை நீர் வெள்ளமாக திரண்டிருந்தது. அவ்விடத்தில ஒரு அபரிமிதமான அமைதியும் நிலவியது!!!
நடந்த சம்பவத்தின் அபாரத் தன்மையையும், அசாதாரணத்தையும் உணர அங்கு கூடியிருந்த எல்லோருக்கும் சிறிது நேரம் பிடித்தது. அன்றிலிருந்து செஸ் விளையாட ராஜு வரவில்லை!!! அன்று இன்னொரு வேடிக்கையும் நிகழ்ந்தது! ராஜு தோற்றதை பார்த்து அதிர்ச்சியில் இருந்த சேம்பியன் ரமணியை முதல் தடவையாக நான் (மிகவும் கஷ்டப்பட்டு தான்!) தோற்கடித்தேன்! அந்த தாடிக்கார அறிவாளியை அந்த சம்பவத்திற்குப் பின் நாங்கள் சந்திக்கவில்லை! ஆனால் அவரது அமைதியை தேக்கிய முகம் இன்றும் பளிங்கு போல் என் ஞாபகத்தில் உள்ளது!!!!!
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/09/2005 08:38:00 PM
3
மறுமொழிகள்
Labels: அது ஒரு காலம்(Nostalgia)
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. அந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது ...
2. கார்காலம் ஆகாமல் கல்யாணம் ஆகாமல் தாளாத நிலை கண்டும் ...
3. குயிலே, என்னென்னவோ என் நெஞ்சிலே ...
4. தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும் ...
5. ஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி ...
6. ஆசை தீர பேச வேண்டும் வரவா, வரவா ...
7. ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம்...
8. சொந்தமென்ன பந்தமென்ன அத்தனையும் பெண் தானே ...
9. இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை ...
10. நீ போகும் பாதை என் பூங்காவனம் ...
11. திறந்தது கதவு, என்னை வாவென்று சொன்னது உறவு...
12. கோவிலின் பேரழகோ முன்னழகிலே ...
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/09/2005 12:04:00 PM
10
மறுமொழிகள்
Labels: பல்லவியும் சரணமும்
1. உங்கள் கிரிக்கெட் பற்றிய அறிவுக்கு ஓர் எளிய சோதனை!கீழே விவரிக்கப்பட்டிருக்கும் இந்திய கிரிக்கெட் சகாப்தம் யாரென்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் ?
அவர் தனது முதல் ஆட்டத்தில் (DEBUT) வெற்றிச் சதம் அடித்தவர்!
அவர் ஒரு துவக்க ஆட்டக்காரர் மற்றும் மித வேக பந்து வீச்சாளர்!
அவரது ரன் average 90க்கு மேலே!
என்ன கண்டு பிடித்தீர்களா? இன்னும் சில குறிப்புகள் கீழே.
அவர் ஒரு முறை ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தனது அணியை வெற்றி பெற செய்தவர்!
அவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் ஆட்டத்தில் அணிக்கு வெற்றி தேடித் தந்தவர்!
2. கீழே தரப்பட்டுள்ள எண் வரிசையின் அடுத்த எண்ணை கண்டுபிடியுங்கள்!21, 12, 12, 1, 2 ...
யோசியுங்கள் நண்பர்களே!
இவற்றுக்கான விடைகளை முன்னரே அறிந்தவர்கள் மற்றும் கிரிக்கெட் அறிவு அதிகம் படைத்தவர்கள், தயவு செய்து மற்றவருக்கு வாய்ப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விடைகளை நாளைய பதிவில் இடுகிறேன்.
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/05/2005 11:41:00 PM
12
மறுமொழிகள்
Labels: பதிவர் வட்டம்/புதிர்
அவளது நாட்குறிப்பிலிருந்து
ஞாயிறு மாலையிலிருந்து அவர் நடத்தை சற்று வினோதமாக இருந்தது. என் தோழிகளுடன் நாள் முழுதும் ஷாப்பிங் போய்விட்டு மாலையில் அவரை மதுரா ஹோட்டலில் டின்னருக்கு சந்திப்பதாகத் தான் ஏற்பாடு. அதற்கு சற்று லேட்டாகச் சென்றதால் தான் அப்படி இருக்கிறாரோ என நினைத்து மன்னிப்பு கேட்டபோது, 'அதெல்லாம் ஒன்றுமில்லை!' என்றார்.
உணவருந்தும்போது, ஏதோ சிந்தனை வயப்பட்டிருந்தார். ஒற்றை வார்த்தைகளில் ஏதோ பேசினார். "சரி வாருங்கள், கடற்கரை சென்று தனிமையில் பேசலாம்" என்றேன். வந்தார். எங்களுக்குள் உரையாடல் எதுவும் நிகழவில்லை! நான் என் தோழிகளுடன் நாள் முழுதும் ஊர் சுற்றியது குறித்து அவருக்கு கோபமோ என்ற நினைப்பில். " என் மேல் ஏதாவது மன வருத்தமா?" என வினவினேன். மறுபடியும், "அதெல்லாம் ஒன்றுமில்லை" என்றார்.
காரில் வீட்டுக்குப் போகும் வழியில் அவரிடம், "நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்!" என்று தோளில் சாய்ந்து சொன்னதற்கு, புன்னகை பூத்தார். "நானும் கூடத் தான்!" என்று சொல்வார் என எதிர்பார்த்து ஏமாந்தேன்!!! என்னவோ என்னை விட்டு அவர் விலகிச் செல்வது போலத் தோன்றியது. நான் அருகில் இருப்பதையே அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை!
வீடு வந்தவுடன் டிவி பார்க்கத் துவங்கினார். அருகில் இருந்தபோதே அவர் என்னை விட்டு மிகத் தொலைவு சென்று விட்டது போன்ற ஓர் உணர்வு!!! மிகுந்த மன அழுத்தத்துடன் படுக்கையறை சென்றேன். சற்று நேரம் கழித்து அவரும் வந்து அருகில் படுத்துக் கொண்டார்.
இதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது என்ற நிலையில் இருந்த நான், அவருடன் மனம் விட்டுப் பேசி விடுவது என்ற முடிவுக்கு வந்தபோது அவர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்! தூக்கம் வரும் வரை நிறைய அழுதேன்! அவர் தன் மனதில் வேறொருத்தியை நினைத்துக் கொண்டிருப்பதாக உறுதியாகத் தோன்றியது!
என் வாழ்க்கையை தொலைத்து விட்டேன்! விடிவு வரும் என்ற நம்பிக்கையும் இல்லை!!!
*********************************************
அவனது நாட்குறிப்பிலிருந்து
இன்று பெங்களூர் டெஸ்ட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்று விட்டது! என்ன ஒரு கேவலமான தோல்வி!?!
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
4/05/2005 11:35:00 PM
0
மறுமொழிகள்
Labels: சிரிப்பா சிரிங்க